Thursday, March 10, 2005

வஸிஷ்டர்

வஸிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷிபட்டம் வாங்கவேண்டும் என்கிற பழமொழிஅறிந்ததே அப்படி என்ன பெருமை வசிஷ்டருக்கு கொஞ்சம் பார்ப்போமா சிவபெருமான் ஒரு விசேஷமான ஆஸனத்தை வஸிஷ்டருக்கு பரிசாக அளித்திருந்தார்அதில் என்ன சிறப்பு என்றால் அவர் எங்கேசெல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அதற்க்கு முன் அந்த ஆசனம் அங்கே சென்றுவிடும்.ஆதலால் அவருக்கு எங்கு சென்றாலும் ஆஸனத்தை பற்றி கவலை இல்லை. மத்த முனிவர்களுக்கு எல்லாம் இதைப்பார்த்து பொறாமையாக இருந்தது.நாமும் அவரை மாதிரிதானே நமக்கு மட்டும் அப்படி ஒரு ஆஸனம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை சிவபெருமானிடமே கேட்கலாம் என்று எண்ணி கைலாயம் நோக்கி புறப்பட்டனர்.பிறைசூடிய பெருமானை கண்ட முனிவர்கள் நமஸ்கரித்து தங்களுடைய ஆதங்கத்தை சொன்னார்கள்.
ஐயா நாங்களும் முனிவர்கள்தானே,வஸிஷ்டரைப்போல் நாங்களும் கடும் தவம் மேற்க்கொண்டபோதிலும்அவருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்றனர்.அதற்கு சிவபெருமான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும் என்று சொன்னார், என்ன? என்று முனிவர்கள் கேட்க நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக போய் உங்களைவிட உயர்ந்த ஒருவரை தேடிப்பிடித்து அதிதி பூஜை செய்து அவரை ஒரு மண்டலத்திற்க்குள் என்னிடம் அழைத்துவரவேண்டும் என்றார்.சரி என்று கூறி அனைவரும் புறப்பட்டனர்.அனைவரும் சென்றதும் நந்திதேவரை கூப்பிட்டு வஸிஷ்டரை அழைத்துவருமாறு ஆணையிட்டார்.வஸிஷ்ட்டரும் வந்து பரமனை பணிந்து நின்றார்.வசிஷ்ட்டரே இன்றிலிருந்து ஒரு மண்டலத்திற்க்குள் உங்களைவிட தாழ்ந்த ஒருவரை கண்டறிந்து
அவருக்கு அதிதி பூஜை செய்து அழைத்துவரவேண்டும் என்றார்.சரி என்று கூறி புறப்பட்டார்.சிறிது நாள் சென்றபின் முனிவர்கள் எல்லோரும் பரமனிடம் வந்தனர்.பரமனே எவ்வளவோ தேடியும்
எங்களைவிட உயர்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றனர்.வஸிஷ்டரும் வந்தார்.பரமனே எவ்வளவோ தேடியும் என்னைவிட தாழ்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றார்.
வஸிஷ்டரே தொடர்ந்து சொன்னார்.என்னுடைய மனைவி எனக்கு அடங்கினவள்தானே அவளுக்காவது அதிதி பூஜை
அழைத்துவரலாம் என எண்ணினேன் அதற்கும் எனது மனம் இடம்தரவில்லை.ஏனென்றால் என்னுடைய மனைவியின்
பதிவிரதத்திற்கு முன் னாம் எம்மாத்திரம் என எண்ணி அதையும் கைவிட்டுவிட்டேன் என்றுரைத்தார்.அதை கேட்ட மற்ற
முனிவர்கள் வெட்கமுற்ற்னர்.நாம் இந்த உலகத்தில் னம்மைவிட மேலானோர் எவருமில்லை என்றுஎண்ணிணோம் ஆனால்
வஸிஷ்டரோ தம்மைவிட தாழ்ந்தோர் எவருமில்லை என்கிறார்.பரமன் ஏன் அந்த ஆஸனத்தை அவருக்கு அளித்தார்என்பதற்கான உண்மை உணர்ந்தனர்.செயற்க்கறிய செய்வார் பெறியோர்.அப்படி தற்காலத்தில் வலைதளத்தில்எத்துனையோ வல்லுனர்கள் தங்களுடைய திறத்தை வெளிப்படுத்தினாலும் கற்காலத்தில் கடமை உணர்வுகளொடு
வாழ்ந்த மாமுனிவர்கள் சென்ற தடங்கள் பின்சென்று தவத்தால் உயர்தவர்களின் சரித்திரத்தைவலைத்தலத்தில் காண்போம்


வஸிஷ்ட ஹரித ஆகிய கோத்திரங்களின்
ப்ரவர ரிஷி ஒன்று மட்டும்தான்

வாஸிஷ்ட

வாஸிஷ்ட கௌண்டின்ய மித்ராவருண
மௌத்கள
ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட மைத்ராவருன கௌண்டின்ய

வாஸிஷ்ட ஆஸ்வலாயண உபமன்யு காண்வ
ஜாதூகர்ண்ய
ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஐந்த்ரமத ஆபரத்வஸவ்ய

போதாயண கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஆத்ரேய ஜாதூகர்ண்ய

பராஸர
கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஸாக்த்ய பாராஸர்ய

Saturday, March 05, 2005

விஸ்வாமித்ரர்

விஸ்வாமித்ரர் ரிஷியின் வழி வந்த கோத்திரங்கள் 13

கோத்திரங்களையும் கோத்திர ப்ரவரங்களையும் காண்போம்

கௌஸிக, அகமர்ஷண கோத்திரங்களின் ப்ரவரம்

வைஸ்வாமித்ர ஆகமர்ஷண கௌஸிக

விஸ்வாமித்ர, ஸாலவத,காலவ,

ஜாபால ,தேவராத கோத்திரங்களின் ப்ரவரம்

வைஸ்வாமித்ர தேவராத ஔதல

கௌஸிக கோத்திர ப்ரவங்கள்

வைஸ்வாமித்ர ஸாலங்காயண கௌஸிக

காத்யாயண கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர காத்ய அத்கீல

காமகாயண கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர தேவஸ்ரவஸ தைவதரஸ

லோஹித கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர அஷ்டக லோஹித

கத கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர மாதுச்சந்தஸ ஆஜ

கதக கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர கதக

Thursday, March 03, 2005

அத்ரி கோத்திர ப்ரவரங்கள்

அத்ரி முனிவரின் கோத்திரத்திங்களையும்
அதன் ப்ரவரங்களையும் காண்போம்
அத்ரி ஆத்ரேய உத்தாளக தத்தாத்ரேய பதஞ்சல மாஹுலி
கோத்திரங்களின் ப்ரவரம்

ஆத்ரேய அர்ச்சனானஸ ஸ்யாவாஸ்வ

முத்கல மௌத்கல்ய கௌரிவீத கோத்திரங்களின் ப்ரவரம்
ஆத்ரேய அர்ச்சனானஸ பௌர்வாதித


தக்ஷ கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய காவிஷ்டீர பௌர்வாதித


தனஞ்சய கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய அர்ச்சனானஸ காவிஷ்டீர


பீஜாவாப கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய அர்ச்சனானஸ ஆதித


பாலேய கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய வாமரத்ய பௌத்ரிக

Wednesday, March 02, 2005

முன்னோடியான முனிவர்கள்

கண்ணன் மொழி கேட்ட காண்டீபன் போல்

எனது அருமை ஆசான்(மானசீககுரு) திருவாளர்

நா.கண்ணன் அவர்களின் அன்பு கட்டளையை சிரமேற்று

மின் வலையில் மெதுவாய் நுழைந்துள்ளேன்

தென் கொரியாவில் இருந்தாலும் தலைவர்

மின் வலையில் முன்னனியில் உள்ளவர்.

தமிழ் மீது உள்ள மிகுந்த ஈடுபாட்டாலோ

என்னமோ தெரியவில்லை மனுஷன் யாராவது கம்ப்யூட்டெரும்

கையுமா இருந்தா போதும் ராமாயணத்த ஆரம்பிச்சுடுவார்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதில்

எனக்கு கிடைக்கும் பெருமை எல்லாம் அவரையே சாறும்.

விஷயத்துக்கு வருவோமா.ப்ருகு முனிவரின் கோத்திரத்தில்

உண்டான 20 ப்ரவரங்களை கண்டோம்.சில பொதுவாகவே

மூன்று ரிஷிகள் அல்லது ஐந்து ரிஷிகள் கொண்ட ப்ரவரங்களையே கேள்வி பட்டுள்ளோம்.

1, 2.4,7ரிஷிகள் கொண்ட த்திரங்கள் சிலவும் உண்டு.

2 அங்கிரசர்

கன்வ ஆங்கிரச ஆஜமிட கான்வ

கன்வ, கபில கோத்திரங்களின் ப்ரவரம்

ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய

கார்கேய, பாரத்வாஜ, கௌண்டின்ய ,

ஆபஸ்த்ம்ப கோத்திரங்களின் ப்ரவரம்

ஆங்கிரச பாரத்வாஜ பாரத்வாஜ

பௌருகுத்ஸ, பாதராயண, விஷ்ணுவ்ருத்த

கோத்திரங்களின் ப்ரவரம்

ஆங்கிரச பௌருகுத்ஸ த்ராஸதஸ்ய

குத்ஸ , ஹரித கோத்திரங்களின் ப்ரவரம்

ஆங்கிரச ஆம்பரீஷ யௌவனாஸ்வ

கௌதம ஆயாச்ய கோத்திரங்களின் ப்ரவரம்

ஆங்கிரச ஆயாச்ய கௌதம

கர்க கோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச சைன்ய கர்க (கார்க்ய)

குத்ஸ கோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச மாந்தாத்ர கௌத்ஸ

கார்கேய கோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச கார்க்ய சைத்ய

பௌருகுத்ஸகோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச பௌருகுத்ஸ ஆஸதஸ்ய

ஷடமர்ஷணகோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச த்ராஸதஸ்ய பௌருகுத்ஸ

ஸங்க்ருதிகோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச ஸாங்க்ருத்ய கௌரிவீத

ஸங்க்ருதிகோத்திரத்தின் ப்ரவரம்

ஸாத்ய ஸாங்க்ருத்ய கௌரிவீத

மௌத்கல்ய கோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச ஆம்பரீஷ மௌத்கல்ய

மௌத்கல்யகோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச பார்ம்யஸ்வ மௌத்கல்ய

ராதீதரகோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச வைரூப ராதீதர

கப்யாங்கிரஸகோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய

கார்கேயகோத்திரத்தின் ப்ரவரம்

ஆங்கிரச பாரத்வாஜ ஸைன்ய கார்க்ய